ஏறுமுகத்தில் எரிபொருள்களின் விலை!

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 08:28 am
today-also-petrol-diesel-price-hike-in-chennai

சென்னையில்  இன்று பெட்ரோல், டீசல் முறையே 52 காசுகள், 63 காசுகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன. அதாவது, தொடர்ந்து நான்காவது நாளாக எரிப்பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.87-க்கும், டீசல் ரூ.66.62-க்கும் விற்கப்பட்டு  வந்தது.
இந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில் 52 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.72.39-க்கும், டீசல் 63 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.67.25-க்கும் விற்கப்படுகிறது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்தை பொருத்து, எரிபொருள்களின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகின்றன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close