தை பிறந்ததும் வழியும் பிறந்தது: முதலீட்டாளர்கள் குஷி

  Newstm Desk   | Last Modified : 15 Jan, 2019 04:20 pm
share-markets-hits-high

கடந்த வாரத்தில் கடும் சரிவை சந்தித்த, இந்திய பங்கு சந்தைகள், ஒரு வாரத்தில் விட்டதை, இன்று ஒரே நாளில் பிடித்தது போல், கடும் உயர்வை சந்தித்தன. 


தை முதல் நாளான இன்று, வர்த்தக நேர முடிவில், தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிப்டி, 149 புள்ளிகள் உயர்ந்து, 10,886 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. 

மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், ஒரே நாளில், 464 புள்ளிகள் உயர்ந்து, 36,318 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. 

விப்ரோ, எஸ்பேங்க், டெக் மகேந்திரா, இன்போசிஸ், ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்தது. 

மாருதி, பவர்கிரிட், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சற்றே சரிவை சந்தித்தன. எனினும், இன்றைய வர்த்தகம், வாடிக்கையாளர்களுக்கு சர்க்கரை பொங்கலாகவே இருந்தது எனலாம். 

வரும் நாட்களிலும், சந்தையின் போக்கு சற்று ஏறுமுகமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக, நிதித்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close