சற்று விலை குறைந்த பெட்ரோல்!

  Newstm Desk   | Last Modified : 16 Jan, 2019 08:40 am

petrol-price-less-diesel-price-hike-in-chennai

சென்னையில்  இன்று பெட்ரோல் விலை சற்று குறைக்கப்பட்டும், டீசல் விலை சற்று அதிகரித்தும் விற்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.08-க்கும், டீசல் ரூ.68.09-க்கும் விற்கப்பட்டு  வந்தன.
இந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில்  8 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.73-க்கும், டீசல் 13 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.68.22-க்கும் விற்கப்படுகிறது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

கடந்த 5 நாள்களாக பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இன்று அதன் விலை சற்று குறைந்துள்ளது. அதேசமயம் டீசல் விலை தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close