அப்பாடா... குறைந்தது பெட்ரோல் விலை!

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 07:59 am
petrol-price-down-in-chennai-today

சில நாள்கள் இடைவெளிக்கு பிறகு சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது. அவை முறையே 9 காசுகள், 11 காசுகள் குறைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

சென்னையில் கடந்த ஜனவரி 22 -ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை, அதாவது 7 நாள்களுக்கு பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் லிட்டர் ரூ.73.99-க்கு விற்கப்பட்டு வந்தது.

இதேபோன்று டீசல் விலையிலும் கடந்த மூன்று நாள்களாக ஏற்ற, இறக்கம் இல்லாமல், ஒரு லிட்டர் ரூ.69.72-க்கு விற்கப்பட்டு கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்று இரு எரிப்பொருள்களின் விலையிலும் முறையே 9 காசுகள், 11 காசுகள் குறைக்கப்பட்டு அவை ரூ.73.90, ரூ.69.61-க்கு விற்கப்படுகின்றன.

பொதுத் துறை நிறுவனமான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close