பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 07:55 am
today-s-petrol-diesel-price-in-chennai

சில நாள்கள் இடைவெளிக்கு பிறகு, சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்று சற்று  குறைக்கப்பட்ட நிலையில், இன்று அவற்றின் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல், நேற்றைய விலைக்கே விற்கப்படுகின்றன.

சென்னையில் கடந்த ஜனவரி 22 -ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை, அதாவது 7 நாள்களுக்கு பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் லிட்டர் ரூ.73.99-க்கு விற்கப்பட்டு வந்தது.

இதேபோன்று டீசல் விலையிலும் கடந்த மூன்று நாள்களாக ஏற்ற, இறக்கம் இல்லாமல், ஒரு லிட்டர் ரூ.69.72-க்கு விற்கப்பட்டு கொண்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று இரு எரிப்பொருள்களின் விலையிலும் முறையே 9 காசுகள், 11 காசுகள் குறைக்கப்பட்டு அவை ரூ.73.90, ரூ.69.61-க்கு விற்கப்பட்டு வந்தன.

இன்றும் இவற்றின் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எரிபொருள்களின் விலையில் எவ்வித ஏற்ற, இறக்கமும் இல்லாமல், அவை நேற்றைய விலைக்கே விற்கப்படுகின்றன.

அதாவது இன்றும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.90-க்கும், டீசல் ரூ.69.61-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பொதுத் துறை நிறுவனமான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close