தாறுமாறாக உயரும் தங்கம் விலை!

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 11:38 am
gold-price-hike-in-past-three-days-in-chennai

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.184 விலை உயர்த்தப்பட்டு ரூ.25,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய விலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.3,145 வீதம், ஒரு பவுன் ரூ.25,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று காலை கிராமுக்கு ரூ.23 வீதம் பவுனுக்கு 184 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.25,344 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று நாள்களில் மட்டும், சென்னையில் தங்கத்தின் விலை பவுனுக்கு 376 ரூபாய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close