உலகின் நம்பர் 1 நிறுவனமானது ‛ஆப்பிள்’

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 12:30 pm
apple-becomes-no-1-company-in-the-world

அமெரிக்க பங்கு சந்தையில், ஆப்பிள் நிறுவன பங்கு விலை உயர்ந்ததை அடுத்து, அந்த நிறுவனம், சந்தை முதலீட்டு மதிப்பின் அடிப்படையில், உலகின் நம்பர் ஒன் நிறுவனம் என்ற அந்தஸ்த்தை மீண்டும் பெற்றுள்ளது.

அமெரிக்க பங்கு சந்தையில் முதலிடம் பிடிப்பதில், மைக்ரோசாப்ட், ஆப்பிள், அமேசான் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில், முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவது வழங்கம். 

புதிய திட்டங்கள், விற்பனை அதிகரிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், இந்த நிறுவனங்களில் செய்யப்படும் முதலீட்டில் ஏற்ற இறக்கம் காணப்படும். இந்நிலையில், அமெரிக்க பங்கு சந்தையில்,  ஆப்பிள் நிறுவன பங்கின் விலை உயர்வடைந்துள்ளது. 

இதனால், அந்த நிறுவனத்தின் மாெத்த மதிப்பு, 82,100 காேடி டாலராக உள்ளது. அதாவது, 58.29 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதே சமயம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மதிப்பு, 81,900 கோடி டாலராகவும், அமேசான் நிறுவனத்தின் மதிப்பு, 81,600 கோடி டாலராகவும் உள்ளது. 

இதன் மூலம்,  ஆப்பிள் நிறுவனம் மீண்டும், உலகின் நம்பர் ஒன் அந்தஸ்த்தை எட்டியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close