பங்கு சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்!

  அனிதா   | Last Modified : 20 May, 2019 09:50 am
start-with-the-stock-market-rises

மக்களவை தேர்தலுக்கான பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியான நிலையில் இன்று பங்கு சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளது. 

17வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிகிறது. இந்நிலையில், பங்கு சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது.  

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 284 புள்ளிகள் உயர்வுடன் 11,691 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.  அதேபோல், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,8819 வர்த்தகமாகி வருகிறது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close