தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எதிரொலி : உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை!

  முத்து   | Last Modified : 20 May, 2019 09:09 pm
bjp-wins-in-polls-stock-markets-incresed

மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. இதில் அனைத்து கருத்துக்கணிப்புகளும், மத்தியில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ளன.

இக்கருத்துக்கணிப்பின் எதிரொலியாக, வாரத்தின் முதல்நாளான இன்று காலை முதலே இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் விலை ஏறுமுகத்திலேயே இருந்தன.

மாலை வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,421  உயர்ந்து, 39,352 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இதேபோன்று  தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 421 புள்ளிகள் அதிகரித்து, 11,828 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close