பாஜக முன்னிலை: பங்குச்சந்தையில் இதுவரை இல்லாத புதிய உச்சம்

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 11:07 am
bjp-leadership-the-highest-peak-in-the-stock-market

தேர்தல் முடிவுகளையடுத்து இந்திய பங்குச்சந்தையில் இதுவரை இல்லாத உச்சத்தை கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்து 40,054 என்ற புதிய உச்சத்தை தொட்டு, முதல்முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை  நிஃடி 282 புள்ளிகள் உயர்ந்து 12,020 என்ற புதிய உச்சத்தில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேர்தலில்  பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளதால் பங்குச்சசந்தையில் ஏற்றம் கண்டுள்ளது.

தேர்தல் முடிவுகளையடுத்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4-ஆவது நாளாக ஏற்றம் கண்டுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசு உயர்ந்து 69.45 ஆக உள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close