ஒரே நாளில் உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2019 05:03 pm
the-rise-in-the-gold-price-in-one-day-how-do-you-know

சென்னையில் ஒரே நாளில் தங்கத்தின் விலையும், வெள்ளியின் விலையும் அதிரடி உச்சத்தைத் தொட்டு விற்பனையாகி வருகிறது.  இந்த உச்சம் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதுபோல தோன்றுவதாக நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.25,704-க்கும், தங்கம் கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ரூ.3,213-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோ ரூ.1000-ம் உயர்ந்து ரூ.41,300-க்கும், கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.41.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வரும் நாட்களில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு மேலும் உயர்ந்து விற்கும் என்றும், பொது மக்கள் சிறிது நாட்கள் தங்கள் வாங்குவதை குறைத்துக்கொள்வது அவர்களது சேமிப்பிற்கு நல்லது என்றும், செயற்கையான இந்த உயர்வு எதிர்பாராத வகையில் அதிரடியாக குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் சில தங்க நகை விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி தற்போதைய திடீர் விலை உயர்வுக்கு எவ்வித தகுந்த வர்த்தக காரணமும் புலப்படவில்லை என்றும், இந்த விலை உயர்வு செயற்கையாக ஏற்பட்டுள்ளது போல் தோன்றுவதாகவும் நோக்கர்கள் கருதுகின்றனர்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close