2018ல் உலகளவில் 5வது இடம் பிடிக்கும் இந்திய பொருளாதாரம்

  Sujatha   | Last Modified : 27 Dec, 2017 08:02 am


பிரிட்டனின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆராய்ச்சி மையம் (CEBR) நடத்திய ஆய்வின் படி, அமெரிக்க டாலர் மதிப்பின் அடிப்படையில் 2018ம் ஆண்டில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் பொருளாதாரத்தை முந்தி சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரம் 5வது இடம் பிடிக்கும் என தெரிவித்துள்ளது. 

இது குறித்து அந்த மையத்தின் துணை தலைவர் டக்ளஸ் மெக் வில்லியம்ஸ் கூறுகையில், '' 2016ம் ஆண்டு ஏற்பட்ட பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவை காரணமாக இந்தியாவின் வளர்ச்சி சரிவை சந்தித்ததாலும்,  தற்காலிக பின்னடைவை கடந்து இந்திய பொருளாதாரம் டாலர் மதிப்பின் அடிப்படையில் 2018ம் ஆண்டில் பிரிட்டன், பிரான்ஸ் பொருளாதாரத்தை இந்திய பொருளாதாரம் முந்தும். இதன் மூலம் சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரம் 5வது இடம் பிடிக்கும்'' என்றார். மேலும்,  2032 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவை, சீனா முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக CEBR கணித்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close