வருடத்தின் முதல் நாளே முடங்கிய வாட்ஸ்ஆப்

  Anish Anto   | Last Modified : 01 Jan, 2018 06:44 am

தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்ஆப் நேற்று நள்ளிரவு சிறிது நேரம் செயல்படாமல் முடங்கியதால் நெட்டிசன்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டை வரவேற்க அனைவரும் காத்துக் கொண்டிருந்த நேரம். சரியாக 12 மணி ஆனதும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் வீடியோ, ஆடியோ, போட்டோ, குறுந்தகவல் மூலம் புத்தாண்டு வாழ்த்து சொல்ல வாட்ஸ்ஆப்பை திறந்த பலருக்கும் பெரும் அதிர்ச்சி. சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் வாட்ஸ்ஆப்பானது இயங்காமல் முடங்கி விட்டது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் வாட்ஸ்ஆப் செயலி இயங்கவில்லை.

பலரும் தங்கள் மொபைலில் தான் பிரச்னை ஆகிவிட்டதோ எனவும் குழம்பினர். சுமார் ஒரு மணி நேர முடக்கத்திற்கு பிறகு வாட்ஸ்ஆப் மீண்டும் செயல்பட துவங்கியது. ஆனால் அதற்குள் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியையும், புகார்களையும் தெரிவிக்க துவங்கி விட்டனர். ஒரே நேரத்தில் அதிகமானோர் வாழ்த்து செய்தி அனுப்பியதால் வாட்ஸ்ஆப் முடங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close