ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் புதிய ஆஃபர்!

  முத்துமாரி   | Last Modified : 04 Jan, 2018 11:17 am


தற்போது ஜியோவின் திட்டத்துக்கு போட்டியாக ஏர்டெல் தொடர்ந்து புதிய ஆஃபர்களை அறிவித்து வருகிறது. ஜியோ ரூ.799க்கு, ஒருநாளைக்கு 3 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு 84 ஜிபி வழங்குகிறது. ஜியோவின் இந்த திட்டத்திற்கு போட்டியாக ஏர்டெல் கடந்த மாதம் அதே 799 ரூபாயில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதன்படி, ஒரு நாளைக்கு 3.5 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு மொத்தம் 98 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் சிறிது மாற்றம் செய்து மொபைல் டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்படி ரூ.799 திட்டத்தில் சேரும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 250 நிமிடங்களும், ஒரு வாரத்திற்கு 1000 நிமிடங்களும் கொடுக்கப்படும். இதுதவிர, ஒருநாளைக்கு இலவசமாக 100 லோக்கல், எஸ்.டி.டி. எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியும். மேலும், ஏர்டெல் பேமெண்ட் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது 75 ரூபாய் கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close