சென்னையில் கைவினை பொருள் கண்காட்சி துவக்கம்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 12 Jan, 2018 08:33 pm

பொங்கலையொட்டி சென்னையில் கைவினை பொருள்கள் கண்காட்சி  ஜனவரி 14 முதல் தொடங்கப்படவிருக்கிறது. இக்கண்காட்சி 'தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ எனும் பெயரில் தொடங்கப்படவிருக்கிறது.

இதற்கென சுமார் 120 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள விற்பனை அரங்குகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வித கைத்தறி ஆடைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுடன் போர்வை, பல மாநில கைவினை அலங்கார பொருள்களும் அதில் விற்பனைக்கு வைத்திருக்கின்றனர். கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் மக்களிடம் நம் பாரம்பரிய கலை வேலைப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி துணி வகைகளுக்கு 20 சதவிகிதமும், கைவினை மற்றும் பேஷன் ஜூவல்லரி ரகங்களுக்கு 10 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி புத்தக காட்சி திருவிழா ஒரு பக்கம் நடந்து வரும்வேளையில் இந்த கைவினைபொருள் கண்காட்சியும் மக்களுக்கு இரட்டை மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close