ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிடும் 'ஜியோ காயின்'

  முத்துமாரி   | Last Modified : 12 Jan, 2018 04:49 pm


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்  'ஜியோ காயின்' என்ற கிரிப்டோ கரன்சியினை வெளியிட இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

ஜியோ நிறுவனம் ஆரம்பித்து மிகக்குறைந்த காலகட்டத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. கடந்த 15 மாதங்களில் சுமார் 16 கோடி வாடிக்கையாளர்களை பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தலைவரான அம்பானி  'ஜியோ காயின்' என்ற கிரிப்டோ கரன்சியினை வெளியிட இருக்கிறார். இதற்காக  அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் தலைமையில் 50 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு தற்போது 'ஜியோ காயின்' தொடர்பான தொழில்நுட்ப வசதிகளை ஆராய்ந்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close