சக்கை போடு போட்ட எட்டைய புரத்து ஆட்டு சந்தை விற்பனை

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 13 Jan, 2018 04:22 pm

எட்டையபுரத்தில் வழக்கத்துக்கு மாறாக பொங்கலை முன்னிட்டு  இந்த முறை ஆட்டு சந்தை விற்பனை மிகவும் அமோகமாக நடந்திருக்கிறது என தகவல் வெளியாகியிருக்கிறது. 

வாரம் தோறும் தூத்துக்குடி மாவட்டம் பகுதியை சேர்ந்த எட்டையபுரத்தில்  ஆட்டு சந்தை நடப்பது வழக்கம். ஆட்டு சந்தைக்கு மிகவும் பாப்புலர் ஆன இந்த பகுதியில் இன்று பொங்கலை முன்னிட்டு சிறப்பு ஆட்டு சந்தை நடந்தது. மிகவும் வியக்கும் வண்ணம் அதி பிரமாண்டமாக நடந்த அந்த ஆட்டு சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

அந்த சந்தையில் எப்போதும் வழக்கமாக சுமார் ரூ.50 லட்சத்திற்கு நடப்பதுவே வழக்கம். ஆனால் இன்று ஒரு நாளில் அந்த சந்தையில் மட்டும் சுமார் 6 கோடிக்கு ஆடுகளின் விற்பனை நடந்துள்ளது என தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close