அமேசான், ப்ளிப்கார்ட்டில் பதஞ்சலி விற்பனை

  SRK   | Last Modified : 17 Jan, 2018 09:40 am


யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், துவங்கியதில் இருந்தே இந்திய வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, வருவாயில் சாதனை படைத்து வரும் அந்நிறுவனம், புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. 

தற்போது ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம், பதஞ்சலி பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல அதன் நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். இதற்காக அமேசான், ப்ளிப்கார்ட், பேடிஎம் போன்ற முன்னணி நிறுவனங்களிடம் பதஞ்சலி கூட்டணி அமைத்துள்ளது. ஏற்கனவே தங்களது இணையதளம் மூலம், ஆன்லைனில் ஆடர் செய்பவர்களுக்கு தங்கள் பொருட்களை கொண்டு செல்லும் சேவையை வழங்கி வந்த பதஞ்சலி, அதில் கிடைத்த வரவேற்பை பார்த்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

கடந்த நிதியாண்டில் மட்டும் 10,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பு ஆண்டில் அதை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளனர். 50,000 கோடி ரூபாய் வரையிலான பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் தங்களுக்கு உள்ளதாகவும் பதஞ்சலி தெரிவித்துள்ளது. இந்த புதிய கூட்டணி, மிகப்பெரிய வெற்றியடையும் என அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close