ஃபிளிப்கார்ட் 'ரிபப்ளிக் டே சேல்' ஆஃபர்.. ஜன. 21 முதல் 23 வரை

  முத்துமாரி   | Last Modified : 20 Jan, 2018 01:03 pm


ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் விடுமுறைக்கான விற்பனை ஆஃபரை அறிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம் ஜனவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை 'கிரேட் இந்தியன் சேல்' ஆஃபரை அறிவித்தது. இதனையடுத்து குடியரசு தினத்தை முன்னிட்டு ஃபிளிப்கார்ட் நிறுவனம் 'ரிபப்ளிக் டே சேல்' ஆஃபரை விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதன்படி ஃபிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை வரும் ஜனவரி 21ம் தேதி நள்ளிரவு முதல் ஜனவரி 23ம் தேதி வரை இருக்கும்.  வீட்டிற்குத் தேவையான மின்னணு பொருட்கள், ஆடை, அணிகலன்கள் மற்றும் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும், கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ வசதி உள்ளது. ஸ்மார்ட்போன் வாங்கும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. முழுவிபரங்களுக்கு www.flipkart.com இணையதளத்தை அணுகவும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close