7.4% பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா!

  SRK   | Last Modified : 23 Jan, 2018 09:13 am


பிரதமர் மோடி, இன்று டாவோஸில் நடக்கும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள ஸ்விட்சர்லாந்து சென்றுள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (IMF) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2019ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.4% வளர்ச்சியை தொடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், 2017ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவு பொருளாதார வளர்ச்சியை இந்தியா கண்டதாகவும் 2019ல் 7.4%, 2020ல் 7.8% என அது உயரும் என்றும் கணித்துள்ளது. 

நடப்பு நிதியாண்டில், சீனா 6.8% வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு 6.6 சதவீதமாக அது குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ல் அமெரிக்காவின் வளர்ச்சி 2.7 சதவீதமாகவும், 2019ல்  2.5 சதவீதமாகவும் இருக்கும் என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 

முன்பு எதிர்பார்த்த 3.7 சதவீதத்தை விட அதிகரித்து, உலக பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close