சீனாவில் 1000 உற்பத்தி நிறுவனங்கள் மூடல்!

  முத்துமாரி   | Last Modified : 27 Jan, 2018 08:28 pm


சீனாவில் பொருளாதாரத்தை சீர்திருத்தும் பொருட்டு, 1000 நிறுவனங்களை மூட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவில் தலைநகரான பெய்ஜிங்கில் மூலதனம் இல்லாத நிறுவனங்கள் செயல்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் வரும் 2020ம் ஆண்டுக்குள் 1,000 உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படவுள்ளன. மேலும் 300 சந்தைகள் மற்றும் லாஜிஸ்டிக் சேவை நிறுவனங்கள் நிறுத்தப்படவுள்ளன. இதன்மூலமாக பொருளாதாரத்தை சரிசெய்ய முடியும் என சீன வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

முதற்கட்டமாக 2018ம் ஆண்டில் 500 உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் 176 சந்தைகள் மூடப்படுகிறது. இதற்கான பணிகள் சீனாவில் தற்போது தொடங்கியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் சில பல்கலைக்கழகங்களும் மற்றும் சில மருத்துவமனைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.