விவசாயிகளுக்கு க்ரெடிட் கார்டு வழங்கும் எஸ்.பி.ஐ

  SRK   | Last Modified : 31 Jan, 2018 12:30 pm


இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ, முதன்முதலாக விவசாயிகளுக்கு க்ரெடிட் கார்டு கொடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை முதலில் 3 மாநிலங்களில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

"எஸ்.பி.ஐ கார்ட்ஸ் மற்றும் எஸ்.பி.ஐ பேமெண்ட் சேவைகள் சேர்ந்து, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் விவசாயிகளுக்கு க்ரெடிட் கார்டு வழங்கும் சோதனை திட்டத்தை துவங்கியுள்ளோம். பல விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சோதனையின் வெற்றியை கணக்கில் கொண்டு இந்த திட்டம் மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும்" என்றார் எஸ்.பி.ஐ தலைவர் ராஜ்னீஷ் குமார்.

இது ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் கிசான் க்ரெடிட் கார்டு திட்டத்திற்கு மாறானது என்றும் எஸ்.பி.ஐ கூறியுள்ளது. தற்போது வரை 100 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், பரிசீலனை முடிந்து அவர்களுக்கு க்ரெடிட் கார்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close