ஐபோனுக்கு பதில் சோப்பை அனுப்பிய ஃபிளிப்கார்ட்

  முத்துமாரி   | Last Modified : 02 Feb, 2018 12:37 pm


ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் ஐபோன் ஆர்டர் செய்த ஒருவருக்கு டிடெர்ஜென்ட் சோப் டெலிவரி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. 

தற்போது மக்களிடையே ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது அதிரித்து வருகிறது. நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் சில சமயம் வினோதமான நிகழ்வுகளும் நடப்பதுண்டு. அந்த வகையில் மும்பையில் ஒருவருக்கு ஐபோனுக்கு பதில் டிடெர்ஜென்ட் சோப் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மும்பையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வரும் தப்ராஜ் மெஹபூப் நெஹ்ராலி என்பவர் ஃப்ளிப்கார்ட்டில் ரூ. 55,000  கொடுத்து 'ஐபோன் 8' ஆர்டர் செய்துள்ளார். கடந்த ஜனவரி 22ம் தேதி அவரது வீட்டுக்கு ஃப்ளிப்கார்ட்டில் இருந்து பார்சல் வந்துள்ளது. அவர் ஆர்வத்துடன் திறந்து பார்த்துள்ளார். உள்ளே ஐபோனுக்கு பதில் டிடெர்ஜென்ட் சோப் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டபோது, அவர்களிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. இதனையடுத்து அவர் மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து, ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இதுகுறித்து விசாரித்து பதிலளிப்பதாக தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close