ஒலிம்பிக் போட்டியை ஒளிபரப்ப அனுமதி பெற்ற ஜியோ

  Sujatha   | Last Modified : 09 Feb, 2018 05:34 am


தென்கொரியாவில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை, தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது. 

தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று (9-ந் தேதி) தொடங்கி, 25-ந் தேதி முடிகிறது. பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங், லூஜ், ஸ்கை ஜம்பிங், ஐஸ் ஹாக்கி, ஸ்னோ போர்டிங் உள்ளிட்ட 15 விளையாட்டுகளில் 102 நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்தியா உட்பட 90 நாடுகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை IOC (சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி)யுடன் இணைந்து ஜியோ டிவி 24/7 நேரடி ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close