பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,500 கோடி மோசடி!

  முத்துமாரி   | Last Modified : 15 Feb, 2018 09:54 am


பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பைக்கிளையில் ரூ.11,500 கோடி என்ற அளவில் மோசடி முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவில் பணப்பரிமாற்றம் அதிகமுள்ள இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் மிகப்பெரிய அளவில் ஒரு மோசடி நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த வங்கியில் 1.77 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,500 கோடி) மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகள் சிலர் தங்களுக்கு தெரிந்த வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு ரகசியமாக பணப்பரிவர்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. 

இந்த மோசடி குறித்து ஆராய்ந்து வருவதாகவும், மோசடிக்குத் துணை போன அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மோசடியின் விளைவாக பங்குச்சந்தையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் சரிவடைந்துள்ளன. அதேபோல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் சுமார் 3,000 கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close