ஜியோ ஸ்மார்ட்போனின் விலை என்ன தெரியுமா?

  SRK   | Last Modified : 19 Feb, 2018 01:49 pm


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜிவி மொபைல்ஸ் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து, புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சாதாரணமாக ரூ.2,899-க்கு விற்பனையாகும் இந்த போன், ஜியோ ஆஃபர்களுடன் சேர்த்து பார்த்தால், ரூ.699-க்கு நமக்கு கிடைக்கிறது.

எனர்ஜி E3 என்ற இந்த மொபைல், 4 இன்ச் ஸ்க்ரீன், 5 மெகாபிக்ஸல் பின் பக்க கேமரா, 2 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. 

தற்போது ஜியோ நிறுவனம் 'ஃபுட்பால் ஆஃபர்' வழங்கி வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட மாடல் போன்களை வைத்திருப்பவர்கள் ரூ.198 அல்லது ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால், அவர்களுக்கு 2200 ரூபாய் மதிப்பிலான 44 வவுச்சர்கள் வழங்கப்படும். இந்த வவுச்சர்களை வைத்து, ஒவ்வொரு முறை மேற்கண்ட ரீசார்ஜ் செய்யும் போதும், 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். 

எனர்ஜி E3 மொபைலை வாங்குபவர்களுக்கு இந்த ஃபுட்பால் ஆஃபர் இலவசமாக வழங்கப்படுகிறது. கூட்டி கழித்து பார்த்தால், ரூ.699-க்கு வாடிக்கையாளர்கள் ஜிவி ஸ்மார்ட்போன்களை பெற்றுக்கொள்ளலாம். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close