ரூ.7க்கு 1... ரூ.16க்கு 2ஜிபி - பி.எஸ்.என்.எல்-ன் மினி பிளான்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 26 Feb, 2018 03:12 pm


அரசுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், அதிகரித்துள்ள நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி காரணமாக, அதிரடியான பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் ஜியோவோடு போட்டிப்போடும் முனைப்பில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் புதுப்புது பிளான்களை ரூம் போட்டு யோசித்து அறிமுகம் செய்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் பிஎஸ்என்எல் ரூ.7 - 16 என இரண்டு புதிய பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

ஒரு நாள் வேலிடிட்டியில் இந்த இரண்டு பிளான்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரூ.7 பிளானை வாங்கினால், ஒரு நாளைக்கு ஒரு ஜி.பி அதிவேக டேடாவை பெறலாம். அதுவே, ரூ.16 என்றால், இரண்டு ஜி.பி டேடாவை பெறலாம். மேலும் ஓராண்டிற்கு செல்லுபடியாகும் ரூ.999-க்கு மேக்ஸிமம் என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி, ஓராண்டு காலத்துக்கு அளவில்லா டேட்டா சேவை பெறலாம். இதனுடன், 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும்.

பிளான்களை அறிமுகம் செய்வதுடன், டவர் மற்றும் சிக்னலை சீராக்கினால் எல்லோரும் பி.எஸ்.என்.எல் பக்கம் ஓடிவருவார்கள் என்கின்றனர் பி.எஸ்.என்.எல் பழைய வாடிக்கையாளர்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close