வளைந்த வடிவில் வெளிவரும் நோக்கியா 8110 4G ஸ்லைடர் போன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 26 Feb, 2018 01:05 pm

செல்போனுக்கு பெயர்போன நிறுவனமான நோக்கியா, பார்சிலோனாவில் நடைபெறுகின்ற 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் (Mobile World Congress 2018) அரங்கில் நோக்கியா 8110 4G ஸ்லைடர் எனும் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

என்னதான் ஸ்மார்ட்போன்கள் புதுசு புதுசாக வெளிவந்தாலும், கைக்கு அடக்கமான ஃபீட்சர் போனை இன்னும் பலர் விரும்புகின்றனர். இன்றும் நோக்கியாவின் 1100 மொபைல் மீது பலருக்கு காதல் உண்டு என்றே கூறலாம். கீ பேர்டை முடிக்கொள்ளும் ஸ்மார்ட்டான வசதியுடன் நோக்கியா 8110 4G ஸ்லைடர் உருவாக்கப்பட்டுள்ளது. 


நோக்கியா ஸ்லைடரில் உள்ள சிறப்பம்சங்கள்

* நோக்கியா 8110 4ஜி வோல்ட்இ சப்போர்ட் ஃபீட்சர் போன். 

* 1500 mAh பேட்டரி திறன் கொண்டது.

* குவால்காமின் 205 ஸ்னாப்டிராகன் சிப்செட் பெற்று 512 MB RAM கொண்டு 4ஜிபி சேமிப்பு திறனை பெற்றுள்ளது. 

* இரட்டை சிம் கார்டு பொருத்தப்படும் அம்சத்தை கொண்டுள்ளது.

* பின்புறத்தில் 2 மெகாபிக்சல் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உடன் சென்சார் கேமராவையும் கொண்டுள்ளது.

* WLAN IEEE 802.11 b/g/n, ப்ளூடுத் 4.1, GPS/AGPS ஆகிய அனைத்து சமீபத்திய தொழில்நுட்பங்களும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

* நோக்கியா 8110 இல் கூகுள் தேடுப்பொறி உட்பட கூகுள் அசிஸ்டென்ஸ், மேப், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய அப்ளிகேஷனை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டது.

* கருப்பு மற்றும் மஞ்சள் ஆகிய இரு நிறங்களில் பாலிகார்பனேட் பாடி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

* இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட நோக்கியா 8110 4ஜி போன் இந்தியாவில் 6,300 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது


எல்லாம் இருக்கு, ஆனா வாட்ஸ்அப் இருந்த நல்லா இருந்திருக்கும் என்கிற வாடிக்கையாளர்களின் மைண்ட் வாய்ஸ்-ஐ கேட்ட நோக்கியா நிறுவனம் எதிர்காலத்தில் வாட்ஸ்அப் செயலியையும் வழங்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.