'ஜியோ'வுக்கு சிறந்த தொலைத்தொடர்பு நிறுவன விருது!

  ஐஸ்வர்யா   | Last Modified : 28 Feb, 2018 03:03 pm


சர்வதேச மொபைல் விருதுகள் 2018 பட்டியிலில் சிறந்த நுகர்வோர் சேவையை வழங்கும் மொபைல் ஆபரேட்டர் (Best Mobile Operator Service for Consumers) என்ற விருதினை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 அரங்கில் பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நிறுவனம் சர்வதேச அளவில் டெலிகாம் துறையில் சிறந்த ஆபரேட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுமார் 16 கோடி வாடிக்கையாளர்களை வளைத்துப்போட்டுள்ள ஜியோ நிறுவனம், கடந்த செப்டம்பர் 2016ல் பொதுமக்கள் சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு இலவச டேட்டா சலுகைகள் மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகள் வழங்கிய ஜியோ, ரோமிங் வசதியையும் முற்றிலும் இலவசமாக வழங்கி மக்களை ஈர்த்தது. மேலும் கட்டண சேவைக்கு மாறிய பிறகு தொடர்ந்து அதிரடியான சலுகை விலையில் கூடுதல் டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்கி வருகின்றது.

இதனால் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் மனதில் முதலிடத்தை பிடித்துள்ள ஜியோ நிறுவனத்திற்கு ’சிறந்த நுகர்வோர் சேவையை வழங்கும் மொபைல் ஆபரேட்டர்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.