ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்திற்கு இலவச தொலைக்காட்சி சேவை

  ஐஸ்வர்யா   | Last Modified : 01 Mar, 2018 07:04 pm


ரிலையன்ஸ் பிக் டிவி என்ற சேவை மூலம் இலவச செட்டாப் பாக்ஸ் உடன் தொலைக்காட்சி சேவையை ஒரு வருடத்துக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

செல்போன் சேவையில் பல அதிரடி இலவச சேவைகளை வழங்கி அசத்திய ரிலையன்ஸ் நிறுவனம், மிக நீண்ட காலமாக பிக் டி.வி என்ற டி2எச் சேவையை வழங்கி வந்தது. ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பிறகு ரிலையன்ஸ் மொபைல் சேவையும் காணாமல் போனது. தற்போது ஜியோ மாடலில் டி2எச் சேவையில் சந்தைத் தலைவன் என்ற நிலையை அடைய ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் பிக் டிவி பிரிவின் இயக்குநர் விஜேந்தர் சிங் கூறுகையில், ’இது பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை மேம்படுத்த எடுக்கப்பட்ட திட்டம். ரிலையன்ஸ் பிக் டிவியின் புதிய ஆஃபரில் இணைவதன் மூலம் நவீன ஹெச்டி செட் டாப் பாக்ஸ் மற்றும் ஒரு வருடத்துக்கு ஹெச்டி சேனல்கள் உட்பட மொத்தம் 500 சேனல்களை இலவசமாக பெறலாம். அதன்பின் ரிலையன்ஸின் ஃப்ரீ டு ஏர் (எஃப்டிஏ) என்ற திட்டத்தில் இணைவதன் மூலம் அடுத்த 5 வருடத்துக்கு இலவச சேவையை தொடர முடியும்’ என தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close