ஜிஎஸ்டிக்கு முன்பாக பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை ஏப்.1 முதல் விற்கத் தடை

  முத்துமாரி   | Last Modified : 17 Mar, 2018 03:56 pm


ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன்பாக பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை வரும் ஏப்ரல் 1 முதல் விற்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பொருட்களுக்கு ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) 2017 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி அமலுக்கு வருதற்கு முன்பாக பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து தயாரிப்பு பொருட்களின் மீது உள்ள விலைக்கான ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது. முதலில் அக்டோபர் 31ம் தேதி வரை அனுமதி அளித்தது. பின்னர் வணிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப டிசம்பர் 31, தொடர்ந்து மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 


இதனையடுத்து வரும் மார்ச் 31ம் தேதியுடன் இதற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் பதில் அளித்துள்ளார்.

அவர், "ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கிடையே பெரும்பாலான ஜிஎஸ்டி பொருட்களின் விலையும் மாறுபட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மீண்டும் காலக்கெடு நீட்டிக்க வாய்ப்பில்லை" என தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close