ரூ.350 நாணயம் வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

  PADAMA PRIYA   | Last Modified : 28 Mar, 2018 09:25 am

குருகோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாளை முன்னிட்டு, ரிசர்வ் வங்கி ரூ.350 நாணயத்தை அறிமுகம் செய்ய உள்ளது. 

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 10வது மற்றும் சீக்கியர்களின் கடைசி குருவுமான, குருகோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாளையொட்டி, ரூ.350 நாணயம் வெளியிடப்பட உள்ளது. அது, 44 மி.மீ., விட்டத்தில், 35 கிராம் எடையிலும் உருவாக்கப்படும். இதில் 50 சதவீதம் அலாய் சில்வர், 40 சதவீதம் செம்பு மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் சேர்க்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாணயங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close