நேரடி கடன் பத்திர விற்பனையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 58.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கியில் கடன் பத்திரங்கள் வழங்குவதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பதை ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு கடன் பத்திரங்களை வழங்கும்போது அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய விபரங்களை சரியாக வழங்காமை, ஒழுங்குமுறை இணக்கத்தில் குறைபாடுகள் காரணமாக ரூ.58.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தனியார் வங்கி ஒன்றிற்கு ரிசர்வ் வங்கி அதிகபட்சமாக விதித்துள்ள அபராதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.