வங்கிகள் சனிக்கிழமை இரவு 8 மணி வரை செயல்படும்: ரிசர்வ் வங்கி தகவல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Mar, 2018 09:33 pm


நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் நாளை சனிக்கிழமை இரவு 8 மணி வரை செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மஹாவீர் ஜெயந்தி மற்றும் புனித வௌ்ளி ஆகிய தொடர் விடுமுறைகளால் கடந்த இரண்டு நாட்களாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 1-ம் தேதி ஞாயிறு என்பதால் விடுமுறை. ஏப்ரல் 2ம் தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால் வங்கிகள் செயல்பட்டாலும் அன்றைய தினம் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது. இதனால், பலருக்கும் பண பரிவர்த்தனை மேற்கொள்வது முடியாத காரியமாக இருக்கிறது.

ஐந்து நாட்கள் தொடர்ந்து வங்கி சேவைகள் நடைபெறவில்லை என்றால், பலவிதமான பொருளாதார பாதிப்பு ஏற்படும் நிலை. இதைக் கருத்தில் கொண்டு, சனிக்கிழமை வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. வழக்கமாக மாலையுடன் வங்கி பணிகள் முடிந்துவிடும். ஆனால், ஆன்லைன் பண பரிமாற்றம் முதல் அனைத்துவிதமான வங்கி சேவைகளும் இரவு 8 மணி வரை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் நாளை (சனிக்கிழமை) இரவு எட்டு மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 2015 - 16 மற்றும் 2016 - 17ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய மார்ச் 31ம் தேதியே கடைசி தினம். இதற்காகவும் விரிவான ஏற்பாடுகளை வருமான வரித்துறை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.