வாட்ஸ் ஆப் நம்பர் மாறியதை யாருக்கு சொல்லலாம்? - வந்தாச்சு புதிய அப்டேட்

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Mar, 2018 08:25 pm


விருப்பமானவர்களுக்கு மட்டும் நம்முடைய வாட்ஸ் ஆப் நம்பர் மாற்றம் பற்றிய தகவலை தெரிவிக்கும் வகையில் புதிய அப்டேட் வந்துள்ளது.

புதிதாக அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப்பின் சிறப்பு அம்சம் என்னவென்றால், மொபைல் நம்பர் மாற்றுவது பற்றிய அறிவிப்பை யாருக்கு தெரிவிக்க வேண்டும் என்பதுதான். அதாவது வாட்ஸ் ஆப் பயனர்கள் அவர்களது வாட்ஸ் ஆப் எண்ணை மாற்றினால் மொத்தம் மூன்று வழிகளில் அவரின் நண்பர்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த அப்டேட் ஆனது ஆண்ட்ராய்டின் சமீபத்திய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் காணப்பட்டுள்ளது.

தற்போது வாட்ஸ்ஆப் மொபைல் நம்பரை மாற்றும் வசதி உள்ளது. ஆனால், அது நம்முடைய வாட்ஸ்ஆப்-ல் உள்ள அனைவருக்கும் தெரிவிக்கப்படும். புதிதாக வந்துள்ள அப்டேட்டில் மொபைல் நம்பரை மாற்றுவது பற்றிய தகவலை யாருக்கு எல்லாம் தெரிவிக்கலாம் என்று மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, முதலாவதாக தற்போது உள்ளது போல, மொபைல் நம்பர் மாற்றியதை அனைத்து தொடர்புகளுக்கும் அறிவிக்கலாம். இரண்டாவதாக நம்முடைய சாட்டில் உள்ள தொடர்புகளுக்கு மட்டும் அறிவிக்கலாம். மூன்றாவதாக, நம்முடைய விருப்பம்போல, நமக்கு தேவையானவர்கள் நம்பரை மட்டும் தேர்வு செய்து, அவர்களுக்கு மட்டும் தகவலை அனுப்பலாம்.

இந்த புதிய அம்சமானது, இப்போது, ​​சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பான 2.18.97-ல் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் அப்டேட் செய்யப்படும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close