பிரபல சேவையை இழுத்து மூடியது கூகுள்

  ஐஸ்வர்யா   | Last Modified : 31 Mar, 2018 07:12 pm


கூகுள் நிறுவனத்தின் பிரபல சேவையான goo.gl என்கிற யூஆர்எல் ஷார்ட்னர் சேவையானது, அடுத்த மாதம் முதல் செயல்படாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு செய்தியின் பெரிய லிங்க்கை சிறிதாக்க கூகுள் நிறுவனம் கடந்த 2009-ம் ஆண்டு goo.gl என்ற சேவையை தொடங்கியது. அடுத்த மாதம் முதல் இந்த சேவை செயல்படாது என்றும் அதற்கு மாற்றாக வேறு ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவையின் முழுமையான முடக்கம் 2019-ம் ஆண்டிற்குள் நிகழும் என்று கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் அக்கவுண்ட் கொண்டு யூஆர்எல் ஷார்ட்னரை பயன்படுத்திய பயனர்கள் மார்ச் 30, 2019 வரை கூகுள் யூஆர்எல் ஷார்ட்னரை கிரியேட்டிங், மேனேஜ்மென்ட் மற்றும் அனாலிடிக்ஸ் ஆகிய சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

கூகுள் நிறுவனத்தின் யூஆர்எல் ஷார்ட்னருக்கு பதிலாக ஃபயர்பேஸ் டைனமிக் லின்க்களுக்கு (Firebase Dynamic Links) என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிய ஷார்ட் லின்க்ஸ்களை உருவாக்க நினைக்கும் பயனர்கள், ஃபயர்பேஸ் டைனமிக் லின்க்ஸ் மட்டுமின்றி, பிட்லி Bit.ly மற்றும் Ow.ly போன்ற பிற சேவைகளையும் மாற்றாக பயன்படுத்தலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close