பிஎஸ்என்எல்-லின் அதிரடி ஐபிஎல் பேக்!

Last Modified : 08 Apr, 2018 03:07 pm


பிஎஸ்என்எல் நிறுவனம் ஐ.பி.எல் கிரிக்கெட் சீசனை முன்னிட்டு புதிதாக அதிரடி பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 249 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 51 நாட்களுக்கு 153 ஜிபி டேட்டா வழங்கப்படும். 

நாள் ஒன்றுக்கு 3 ஜிபி என்ற விகிதம் வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். இதனால், ஐபிஎல் பார்க்க விரும்பும் பயனாளர்கள் குறைந்த விலையில் தடையில்லாமல் ஹாட்ஸ்டார் போன்ற ஸ்ட்ரீமிங் ஆப் மூலமாக போட்டிகளை கண்டு களிக்கலாம். நேற்று முதல் இந்த ஆஃபர் அமலுக்கு வந்துள்ளது.

முன்னதாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎல் ஆஃபர்களை அறிவித்தன. 251 ரூபாய்க்கு 103 ஜிபி டேட்டாவை ஜியோ வழங்கிய நிலையில், அனைத்து ஐபிஎல் மேட்சுகளையும் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யலாம் என்ற சலுகையை ஏர்டெல் வழங்கியது. ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களையும் விட, பிஎஸ்என்எல்லின் ஆஃபர் விலை குறைந்ததாகும்.

அதேநேரம், பிஎஸ்என்எல் நிறுவனம் 3ஜி சேவையை மட்டுமே வழங்கி வருவதால், ஜியோ டிவி மூலம் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஐபிஎல் பார்க்க முடியாது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close