பங்குச் சந்தைகளில் அதிகளவில் பிஎஃப் பணம் முதலீடு

  ஐஸ்வர்யா   | Last Modified : 14 Apr, 2018 05:22 pm


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் விரும்பினால் தங்கள் பணத்தை பங்குச் சந்தைகளில் கூடுதலாக முதலீடு செய்யும் வசதி கொண்டு வரப்பட உள்ளது.

பங்குச் சந்தைகளில் அதிகளவில் பிஎஃப் பணம் முதலீடு செய்யும் சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என பிஎஃப் அமைப்பின் மத்தியக் குழு தெரிவித்துள்ளது. தற்போது பிஎஃப் சந்தாதாரர்கள் பணத்தில் 15 சதவிகிதத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் பிஎப் தொகையை 25 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அளவை சந்தாதாரர்கள் விரும்பும் பட்சத்தில் உயர்த்திக்கொள்ளும் வாய்ப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பிஎஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. 

கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பிஎப் தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 5 சதவீதமாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு தற் போது 15 சதவீதம் வரை முதலீடு செய்யப்படுகிறது. பிஎஃப்க்கு நடப்பு நிதி ஆண்டுக்கு 8.55 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பிஎப் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது லாபத்தையே கொடுக்கும் என்கின்றனர் வர்த்தகவியலாளர்கள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close