மோடியின் அட்டல் பென்ஷன் யோஜனா: ரூ.210 செலுத்தி மாதம் 5,000 பெறுங்கள்!!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 19 Apr, 2018 05:43 pm


பிரதான் மந்திரி அட்டல் பென்ஷன் யோஜனா ஓய்வூதிய திட்டத்தின் கீழ், வேலைக்கு செல்லாமலே மாதந்தோறும் சம்பாதிக்கலாம் என மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்திய அட்டல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம், அமைப்பு சாராத (Unorganised) துறையில் வேலை செய்பவர்கள், 60 வயதுக்குப்பின் மாதம் ரூ.1,000 – 5,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். 


இத்திட்டத்தில் பயன்பெற மாதம் ரூ. 42 முதல் 210 வரை செலுத்தி வருடத்திற்கு 60000 வரை பெற முடியும் என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசு சார்பற்ற துறையில் வேலை செய்யும் 18 முதல் 40 வயது வரை உள்ள தொழிலாளர்கள், ஆண்டுதோறும் வரி செலுத்துவது போன்று ஜூன் 1 முதல் மே 31 வரை ரூ. 42 முதல் ரூ. 210 வரை உங்களுக்கு விருப்பமான ஸ்கீம் தொகையை செலுத்த வேண்டும். இதன்பின் பணியாளர் தான் 60 வயதை கடந்த பின்னர் குறைந்ததுரூ.1000 முதல் ரூ.5000 வரை ஒவ்வொரு மாதமும் பெறுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அட்டல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய அனைத்து வங்கிகளிலும் படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. படிவங்களை நிரப்பி, மாதந்தோறும் பணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள 180042597777 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close