அட்மின் சேட்டை தாங்கலயா, உடனே தூக்குங்க! வாட்ஸ் அப் அப்டேட்

  ஐஸ்வர்யா   | Last Modified : 19 Apr, 2018 09:43 pm


பல கோடிகணக்கான நபர்களை தன்னுள் வைத்து அடக்கியாளும் பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களை குஷிப்படுத்த அடிக்கடி புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. 

ஐஓஎஸ் மற்றும் ஆண்டராய்டு மொபைகளில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலி, தற்போது இரண்டு முக்கிய அம்சங்களை அப்டேட் செய்துள்ளது. முதலில் வாட்ஸ் அப் உரையாடலின் போது அனுப்பப்படும் அல்லது பெறப்படும் மீடியா பைல்களை (போட்டோஸ், வீடியோ, ஜிஃப், வாய்ஸ் மெசெஜ்) டெலிட் செய்துவிட்டால் திரும்பபெறும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. இந்த புதிய அம்சமானது 2.18.106 மற்றும் 2.18.110 வெர்ஷனுக்கு இடைப்பட்ட வாட்ஸ் அப் அப்டேட்டுகளில் சோதனையில் உள்ளது, விரைவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இரண்டாவதாக வாட்ஸ் அப் குரூப்பில் அட்மினாக உள்ள நபரை அந்த குரூப்பில் உள்ள நபர் வெளியேற்றும் வசதியையும் அப்டேட் செய்துள்ளது. வாட்ஸ் அப் குரூப்பில் தலைவனாக உலா வருபவன் தான்  ‘அட்மின்’. அவருக்கு குரூப்பில் உள்ள அனைவரையும், வெளியேற்றும் உரிமை உண்டு. ஆனால் அட்மினை குரூப்பில் இருந்து வெளியேற்றும் உரிமை யாருக்கும் இல்லை. இந்நிலையில் அட்மினை அவர் பொறுப்பில் இருந்து நீக்கும் வசதியை வாட்ஸ் அப் புதிய பதிப்பில் அப்டேட் செய்துள்ளது. இதன்படி ஐஓஎஸ் மற்றும் ஆண்ராய்டு மொபைல்களில் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.117 பதிப்பில் ஹை ப்ரியாரிட்டி நோட்டிஃபிகேஷன் மற்றும் டிஸ்மிஸ் அட்மின் என்ற வசதி வழங்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியில் இருக்கும் இந்த புதிய அம்சங்கள் விரைவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close