கட்டணக்குறைப்பு: ஏர்டெலுக்கு லாபமா? நஷ்டமா?

  Newstm Desk   | Last Modified : 26 Apr, 2018 07:46 am


ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 78% குறைந்துள்ளது. 

ஜியோவிடம் போட்டிபோட்டு கொண்டு அதனை பின்னுக்கு தள்ளும் வகையில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல ஆஃபரை அறிவித்தன. இந்நிலையில் ஏர்டெல் கடந்தாண்டின் முதல் 3 மாதங்களில் 373 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்த நிலையில் தற்போது அதே கால கட்டத்தில் 82 கோடி ரூபாய் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லின் நிகர லாபம் இந்தளவுக்கு குறைவது கடந்த 14 ஆண்டுகளில் இதுவே முதன்முறை. மேலும் நிறுவனத்தின் மொத்த வருமானம் 10.5 சதவீதம் சரிந்து ரூ.19,634 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.21,935 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது. தொலைபேசி கட்டணங்களை செயற்கையாக சிலர் குறைத்து நிர்ணயம் செய்வதே லாப விகிதம் வெகுவாக குறைய காரணம் என ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close