16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த தடை!

  ஐஸ்வர்யா   | Last Modified : 26 Apr, 2018 10:49 pm


பிரபல சமூக வலைதளமான வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த 16 வயது நிரம்பியிருக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் சுமார் 89% மக்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களும் அடங்குவர், அவர்கள் தினமும் 5 மணி நேரம் வாட்ஸ் அப்பிற்கு அடிமையாகி சாட்டிங்கிலே மூழ்குவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போன்களில் அதிகளவு மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. 

இந்நிலையில் 16 வயதுக்குட்பட்டவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும், மேஜர்ஸ் மட்டுமே வாட்ஸ் அப்பை பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதிச் செய்யுமாறும் ஐரோப்பிய பொது தகவல் பாதுகாப்பு ஒழுங்குமுறை சார்பில் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை பரிசீலித்த வாட்ஸ் அப் நிறுவனம் வரும் மே மாதம் 25-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது. ஆனால் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் வயது வரம்பு எவ்வாறு சரிபார்க்கப்படும் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close