'கால் டாக்ஸி' போல சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை: பிரபல இந்திய நிறுவனம் திட்டம்

Last Modified : 02 May, 2018 01:22 pm

டாக்ஸியை புக் செய்வது போல், கப்பல் சரக்கு போக்குவரத்து சேவையையும் புக் செய்து தொழில்துறையில் ஈடுபடுத்த பிரபல இந்திய கப்பல் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. 

ஓலா, உபெர் போன்ற நிறுவனங்கள் வந்ததிலிருந்து இந்தியாவில் பேருந்தை நாடி வந்த பயணிகளில் கணிசமானோர் கால் டாக்ஸியில் பயணிப்பதையே விரும்புகின்றனர். இதன் கட்டணங்கள் அரசு போக்குவரத்துக்கு இணையாக இருப்பதாலும் வீண் அலைச்சலும் தவிர்க்கப்படுவதால் கால் டாக்ஸிகளின் வளர்ச்சி குறைந்த காலத்தில் அதிக வளர்ச்சியை கண்டுள்ளன. 

இந்த நிலையில், இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் உள்ள ஆல்கார்கோ கப்பல் நிறுவனம், இதே திட்டத்தோடு கப்பல் போக்குவரத்தை எளிமையாக்க முயற்சித்து வருகிறது. தனது திட்டத்தை விரிவுபடுத்த உபெர் நிறுவனத்தின் யுத்தியை கையாள்கிறது ஆல்கார்கோ. 

இதன்படி ஆல்கார்கோ நிறுவனம், ஈசியூ வோல்டு வைட் என்னும் நிறுவனத்துடன் இணைந்து உலகளாவிய சந்தையில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கும் விதமாக உபெர் நிறுவனம் பயன்படுத்தும் திட்டத்தை ஆல்கார்கோ பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. 

ஆல்கார்கோ நிறுவனம் கடந்த 5 காலாண்டுகளாக சரிவை சந்தித்துள்ளது. ஆனால், இந்தியாவில் கப்பல் போக்குவரத்தில் கால் பங்கு வர்த்தகத்தை ஆல்கார்கோ நிறுவனம் தன் வசம் வைத்துள்ளது.   

தற்போது, லாப சதவீதத்தை உயர்த்தவே தொழில்நுட்ப உதவியுடன் உலகளாவிய வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்தத் திட்டத்தை ஆல்கார்கோ வகுத்துள்ளது. 

அமேசான், டிஎச்எல் போன்ற நிறுவனங்களும் இதே திட்டத்தை முயற்சித்து வரும் நிலையில், சந்தையில் இதற்கு கடுமையான போட்டி நிலவக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close