ஃபேஸ்புக்கில் "டேட்டிங்" வசதி - இளைஞர்களை சீரழிக்குமா?

  Newstm Desk   | Last Modified : 03 May, 2018 07:56 pm


பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஆண்களும் பெண்களும் சந்திக்கும் வகையிலான டேட்டிங் வசதி ஏற்படுத்தப்படும் என்று அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் தெரிவித்துள்ளார். 

ஆண்டுதோறும் ஃபேஸ்புக் மென்பொருள் பொறியாளர்களுக்காக நடத்தப்படும் F8 மாநாட்டில் பேசிய அந்நிறுவனத்தின் நிறுவனர் ஸக்கர்பர்க், ஃபேஸ்புக்கில் 20 கோடி பேர் தங்களை திருமணமாகாதவர் என (சிங்கிள்ஸ்) என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களுக்கா, புதிய அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதற்கு ஃபேஸ்புக்கில் புதிய வசதி பயன்படும். சிறிது காலம் சேர்ந்து இருப்பது போன்றல்லாமல் நீண்டகாலம் நிலைக்கக் கூடிய உறவுகளை தேர்ந்தெடுப்பதற்கான சேவையை இந்த டேட்டிங்க் வசதி ஏற்படுத்திக்கொடுக்கும். மேலும், ஃபேஸ்புக் மெசெஞ்சர் இன்டர்பேஸை மாற்றியமைக்கும் சில புதிய அப்டேட்களும் ஃபேஸ்புக்கில் வரவுள்ளது" என்று தெரிவித்தார்.

சமீபத்தில் தனக்கு தகுந்த மணமகன் வேண்டும் என்று கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது வைரலான. பலரும் ஃபேஸ்புக் மூலம் காதலர்கள் ஆவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. உறவுகளை ஏற்படுத்தும் வகையில் புதிதாக டேட்டிங் வசதி வருவது இளைஞர்களை அதிக அளவில் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், ஃபேஸ்புக் பயன்பாடு காரணமாக உறவுக்குள் பிரிவு ஏற்படுவது, ஏமாற்று, மோசடி சம்பவங்கள் நடப்பதையும் மறுக்க முடியாத. சில வாரங்களுக்கு முன்புதான், பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், ஃபேஸ்புக் மீதான நம்பிக்கை காற்றில் பறந்தது. இந்தநிலையில், டேட்டிங் வசதி புதிய முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று விமர்சனமும் எழுந்திருக்கிறது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.