ஸ்கேன் செய்து உடல் அளவுக்கு ஏற்ப ஆடைகள்: அதிர வைக்கும் அமேசான்!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 06:14 pm


வாடிக்கையாளர்களின் உடல் அளவை ஸ்கேன் செய்து அதற்கேற்ப ஆடைகளை டெலிவரி செய்ய இருக்கிறது அமேசான் நிறுவனம். 

தற்போது நேரடியாக சென்று ஒரு பொருள் வாங்குவதை விட ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். பல கடைகள் ஏறி இறங்குவதற்கு பதில் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே பல ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஆராய்ந்து விலை குறைவாகவும், தரமாகவும் பொருட்களை வாங்குவைதில் திருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களான அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு பல அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகின்றன. 

மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு ஆஃபர்களை அள்ளித்தரும் அமேசான் நிறுவனம் ஒரு படி மேலே சென்று, தற்போது வாடிக்கையாளர்களின் உடல் அளவுக்கு ஏற்ப ஆடைகளை டெலிவரி செய்ய இருக்கிறது. இதற்காக வாரம் ஒருமுறை வாடிக்கையாளர்களின் உடல் அளவை 3D ஸ்கேன் செய்ய இருக்கிறது. ஒரு வாரத்தில் கூட நமது உடல் சிறிது எடை கூடவோ, குறையவோ செய்யலாம் என்பதால் இந்த வாரம் ஒருமுறை ஸ்கேன்.

பின்னர் அந்த அளவுகளுக்கு ஏற்பவும், ஓரளவுக்கு உடல் எடையில் சிறிது மாற்றம் ஏற்பட்டாலும் கச்சிதமாக பொருந்தக்கூடிய ஆடையை தேர்ந்தெடுத்து வழங்கும். அதேபோல் சிறிது காலம் கழித்து நமது உடல் பருமன் அளவுக்கு ஏற்ப அந்த ஆடையை மாற்றியமைத்துக்கொள்ளலாம். முதற்கட்டமாக நியூயார்க்கில் உள்ள அமேசான் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களை இந்த சோதனைக்கு உட்படுத்த இருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களும் நேரடியாக நியூயார்க் அமேசான் அலுவலகத்திற்கு வரலாம் அல்லது 3D ஸ்கேன் செய்து புகைப்படங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை வெற்றிபெற்ற பிறகு, வாடிக்கையாளர்களிடம் இந்த முறை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அமேசானின் இந்த அறிவிப்பு மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close