பி.எஸ்.என்.எல்-ஐ நோக்கி நகர்ந்த ஏர்செல் வாடிக்கையாளர்கள்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Mar, 2018 06:25 pm


வரும் ஏப்ரல் 15ம் தேதியுடன் ஏர்செல் சேவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஏற்கனவே டிராய் அறிவித்துள்ள நிலையில், அதன் வாடிக்கையாளர்கள் வேறு மொபைல் சேவைகளுக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், இதுவரை சுமார் 1.86 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள், பி.எஸ்.என்.எல் சேவையில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர்செல் சேவை நிறுத்தப்படும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியானது, ஏர்செல் வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜியோவின் வருகை எர்செல்லை திவாலாகியது, இதனால் தங்களது சேவையினை ஏர்செல் நிறுத்தவுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது எண்ணை தக்கவைத்துக்கொள்ள பிற நிறுவனங்களுக்கு விரைவில் மாறிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 

இந்நிலையில், தனது செல்போன் என்னை மாற்றாமல் சேவையை மட்டும் மாற்றி கொள்ளும் வசதியைப் பயன்படுத்தி கடந்த 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 1.86 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள், பி.எஸ்.என்.எல். சேவையில் இணைந்துள்ளதாக ஏர்செல் தலைமை அதிகாரி மார்ஷெல் ஆன்டணி லியோ  தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2018 வரை 1,61,742 வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்கில் இருந்து பி.எஸ்.என். எல் க்கு இணைந்தாக கூறும் மார்ஷெல், கடந்த பிப்ரவரி மாதத்தில் மொபைல் எண் போர்ட்டபிலிடி மூலம் ஏர்செல் பயன்படுத்தி வந்த 57, 345 பேர் பி.எஸ்.என்எல் சேவைக்கு மாறியுள்ளனர். கடந்த மாதத்தில் புதிதாக பி.எஸ்.என்எல் சேவை பதிவு செய்தவர்கள் மொத்தம் 1,28,790 பேர் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close