எஸ்பிஐ குறைந்தபட்ச இருப்புத்தொகைக்கான அபராதம் குறைப்பு

  முத்துமாரி   | Last Modified : 13 Mar, 2018 01:26 pm


பாரத ஸ்டேட் வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காததற்கான அபாராதத் தொகை குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா' வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகமாக அபராதத்தொகை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகின.

மேலும், 8 மாதத்தில் மட்டும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத பொதுமக்களின் கணக்குகளில் இருந்து அபராதத் தொகையாக எஸ்பிஐ ரூ.1,771 கோடி வசூல் செய்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் ஜூலை - செப்டம்பர் மாத காலாண்டின் நிகர லாபமே ரூ.1,581.55 கோடிதான். லாபத்தை விட அபராதத் தொகை மிக அதிகமாக உள்ளது என செய்தி வெளியானது. இதற்கு பொதுமக்களின் தரப்பில் இருந்து சில எதிர்ப்புகளும் கிளம்பின.  

இதனையடுத்து தற்போது எஸ்பிஐ வங்கி அபராதத்தொகையை குறைக்க முன்வந்துள்ளது. அதன்படி, மாநகர மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்கான அபராதத் தொகை ரூ.50 லிருந்து ரூ.15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படும். 

இதேபோல் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள வங்கிக்கிளைகளில் அபராதத் தொகை ரூ.40 லிருந்து ரூ.12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close