'எல்லோ ஆர்மி' சேமிப்பு கணக்கு: சி.எஸ்.கே-வுடன் இணைந்தது ஈக்விடாஸ்!

  நந்தினி   | Last Modified : 22 Mar, 2018 04:54 pm


ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பான்சரானதை குறிக்கும் விதமாக, 'எல்லோ ஆர்மி' என்ற பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கியுள்ளது. 

"சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும், கிரிக்கெட் ஆர்வத்தையும் அதிகரிக்கவே, 'எல்லோ ஆர்மி' என்ற பெயரில் சேமிப்பு கணக்கை ஏகுடஸ் துவங்கியிருக்கிறது. தவிர, சிஎஸ்கே ரசிகர்கள் இந்த சேமிப்பு கணக்கு மூலம் மிகப்பெரியளவில் பயனடைவார்கள்" என்று ஈக்விடாஸ் வங்கி தலைவர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறினார். 

சிஎஸ்கே அணியுடன் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டதோடு, அந்த அணியின் ரீடெய்ல் வங்கி பங்குதாரராகவும் ஈக்விடாஸ் உள்ளது என்றார் சஞ்சீவ்.


சிஎஸ்கே அணி வீரர்கள் ட்வயன் பிராவோ, முரளி விஜய், இன்று 'எல்லோ ஆர்மி' டெபிட் கார்டை அறிமுகம் செய்து வைத்தனர். 

இந்த சேமிப்பு கணக்கின் நன்மையாக, ரூ.10 லட்சத்துக்கு கீழ் உள்ள கணக்குகளுக்கு 6 சதவீதம் வட்டி விகிதமும், ரூ.10 லட்சத்துக்கும் மேல் உள்ள கணக்குகளுக்கு 6.5 சதவீத வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து இழப்பீடாக ரூ.5 லட்சம், விமான விபத்து இழப்பீடாக ரூ.30 லட்சத்தை, இவ்வங்கி வழங்குகிறது. சிஎஸ்கே இணையதளம் மூலம் வாங்கும் பொருட்களுக்கு, 15 சதவீதம் தள்ளுபடியும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close