வாட்ஸ்அப் அப்டேட்- ஜிஃப் சர்ச்

  ஐஸ்வர்யா   | Last Modified : 25 Mar, 2018 09:00 pm


ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் பீட்டா செயலிக்கான புதிய அப்டேட்டில் தேடல் அம்சம் எளிமையாக்கப்பட்டுள்ளது. புதிய சர்ச் அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் பீட்டா டெஸ்டர்களுக்கான புதிய அப்டேட்,  வாடிக்கையாளர்கள் விரும்பும் ஜிஃப்களை தேட வழி செய்கிறது. புதிய அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் பீட்டாவுக்கான வாட்ஸ்அப் 2.18.93 பதிப்பில் ஜிஃப்களை வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தேட வாடிக்கையாளர்களுக்கு வழி செய்கிறது. WABetaInfo வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி, புதிய அம்சம் டெவலப்பர்களால் டிசேபிள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக புதிய அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரிவுகள் மட்டும் உருவாக்கப்பட்டு இருக்கிறது, வரும் நாட்களில் மேலும் பல்வேறு பிரிவுகள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்வான்ஸ்டு ஜிஃப் சர்ச் அம்சத்திலேயே புக்மார்க் செய்யும் வசதியும் சேர்க்கப்படும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close