ஜியோ பிரைம் கஸ்டமரா நீங்கள்?- அப்ப ஒரு வருடத்திற்கு ஃப்ரீ சேவை!

  ஐஸ்வர்யா   | Last Modified : 31 Mar, 2018 09:03 pm

கடந்த ஜியோ பிரைமில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு மேலும் வருடம் இலவச சேவை வழங்கப்படும் என ஜியோ தெரிவித்துள்ளது

சுமார் 17 கோடி வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்திருக்கும் ஜியோ, கடந்த 2016 ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கி 6 மாதத்திற்கு இலவச சேவையை வழங்கியது. அதன்பின் 2017 ஏப்ரல் முதல் கட்டண சேவையை களமிறங்கியது. அப்போது ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.99 செலுத்தி பிரைம் வாடிக்கையாளராக இணைந்தனர். இதைத் தொடர்ந்து சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா, ரோமிங் வசதி, இலவச எஸ்எம்எஸ் சேவை வழங்கப்பட்டன. ரூ. 99 செலுத்திய வாடிக்கையாளர்களின் உறுப்பினர் சேர்க்கை இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஓராண்டு சேவை வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. மார்ச் 31-ஆம் தேதிக்குள் (இன்றுக்குள்) ரூபாய் 99 செலுத்தி ஜியோ பிரைமில் சேர்பவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் கூறியுள்ளது. இதனால் ஏற்கனவே ரூ.99 செலுத்திய உறுப்பினர்கள் மீண்டும் ரூ.99 செலுத்தத் தேவையில்லை. 

ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் சிறப்பு சலுகைகள் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close